தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'போகாதிங்க ப்ளீஸ் தோனி ..!' - கெஞ்சும் அதிதீவிர ரசிகர்கள்! - dhoni retirement

'தல' தோனி இந்திய கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற இன்னும் மூன்று ஆண்டுகள் தான் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது நடக்கும் உலக கோப்பையே அவரது இறுதி உலக கோப்பைத் தொடர் என்பதால் அது குறித்து கிரிக்கெட் ரசிகர்களிடம் ஈடிவி பாரத் தமிழ் கருத்து கேட்டது.

தோனி

By

Published : Jul 3, 2019, 11:03 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான மஹேந்திர சிங் தோனி வயது வரம்பில்லாமல் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தனது கேப்டன்ஷிப் திறமையால் அயல்நாட்டு ரசிகர்களும் விரும்பும் வீரராக திகழ்ந்தவர் 'தல' தோனி. அவர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது நடக்கும் உலக கோப்பையே அவரது இறுதி உலக கோப்பை ஆட்டம் என்பதால், அது குறித்த அவரது ரசிகர்களின் பார்வை பின் வருமாறு:

தோனியின் தீவிர ரசிகர் சுந்தர்:

குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவருக்கும் ஆலோசனைகள் தேவைப்படும் போது தோனி அவர்கள் இருவருக்கும் சில அறிவுரைகள் வழங்கி வழிநடத்துவார். இந்திய அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்கும்போது தோனியே இறுதிவரை நின்று சரியாக விளையாடி இந்திய அணியை வெற்று பெற வைப்பார். தோனியின் அறிவுரை இல்லாமல் விராட் கோலி கொஞ்சம் திணறுவார்.

ரசிகர் சுந்தர் சீனிவாசன்:

தோனி விளையாடவில்லை என்றால் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். ஒரு பேட்ஸ்மேனாக அவரது இடத்தை எந்த ஒரு விளையாட்டு வீரராலும் நிரப்பி விட இயலும். ஆனால், அவரது தலைமைபண்பு மற்றும் கீப்பிங்கில் அவரது இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. ஆட்டத்தை எவ்வாறு வெற்றி பாதைக்கு கொண்டு சொல்ல தோனியால் மட்டுமே முடியும்.

தோனியின் தீவிர ரசிகர்

தல தோனியின் குட்டி ரசிகர் ஒருவர், இலங்கைக்கு எதிராக தோனி அடித்த 183 ரன்னை நம்மிடையே சரியாக கூறியது மிகவும் ஆச்சர்யத்தையும், தோனி அனைத்து வயதினரிடத்திலும் சென்றதை காட்டியது.

ABOUT THE AUTHOR

...view details