இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி, இரு நாட்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தது.
அந்த வீடியோவில் இடதுகை பேட்ஸ்மேன் சிவம் துபே பயிற்சி செய்யும் வீடியோ ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவம் துபேவின் பேட்டிங் ஸ்டைல், நிற்கும் ஸ்டான்ஸ் ஆகியவை இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கை போல் உள்ளதாக ரசிகர்கள் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.