தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மீண்டும் அப்பாவான டூ ப்ளஸிஸ் - ரசிகர்கள் வாழ்த்து! - அப்பாவான டூ ப்ளஸிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டூ ப்ளஸிஸுக்கு இரண்டாவது மகள் பிறந்துள்ளதால், அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

faf-du-plesis-blessed-with-baby-girl
faf-du-plesis-blessed-with-baby-girl

By

Published : Aug 20, 2020, 8:05 PM IST

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் டூ ப்ளஸிஸ், தனது நீண்ட நாள் காதலியான இமாரி விசெர் என்பவரை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்தத் தம்பதியினருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தைப் பிறந்தது. அக்குழந்தைக்கு அமெலி (Amelie) என்று பெயர் சூட்டியிருந்தனர். இந்நிலையில் இன்று (ஆக. 20) இந்தத் தம்பதியினருக்கு இரண்டாவது மகள் பிறந்துள்ளார். இம்மகிழ்ச்சியான செய்தியினை, டூ ப்ளஸிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

குழந்தைக்கு ஜூயி (Zoey) என்று பெயர் வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தென் ஆப்பிரிக்க வீரர் டூ ப்ளஸிஸிற்கும் அவரது மனைவிக்கும் உலகம் முழுவதிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:டூ பிளேஸிஸ் செயலுக்கு வாழ்த்துக் கூறிய சுரேஷ் ரெய்னா!

ABOUT THE AUTHOR

...view details