தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘இது ரிஷப் பந்திற்கான நேரம்’ - பிரவீன் அம்ரே - வில் புகோவ்ஸ்கி

ரிஷாப் பந்த் இந்தியாவிற்காக அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் திறனைக் கொண்டிருப்பவர் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட துணை பயிற்சியாளர் பிரவீன் அம்ரே ஈடிவி பாரத்துடனான சிறப்பு உரையாடலில் தெரிவித்துள்ளார்.

EXCLUSIVE: Rishabh Pant's time will come, says DC coach
EXCLUSIVE: Rishabh Pant's time will come, says DC coach

By

Published : Jan 7, 2021, 2:53 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இன்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்துள்ளது.

மேலும் இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் செயல்பட்டுவருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் அறிமுக வீரரான வில் புகோவ்ஸ்கியின் இரண்டு கேட்சுகளை ரிஷப் பந்த் தவறவிட்டார். இதனால் அடுத்த போட்டியிலிருந்து சஹா இந்திய அணியின் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவத்தொடங்கின.

ஆனால் ரிஷப் பந்த் இந்தியாவிற்காக அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் திறனைக் கொண்டிருப்பவர் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய துணைப் பயிற்சியாளர் பிரவீன் அம்ரே ஈடிவி பாரத்துடனான சிறப்பு உரையாடலின்போது தெரிவித்துள்ளார். பிரவீன் அம்ரேவின் உரையாடல்...

கேள்வி: மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்தின் செயல்திறன் குறித்த உங்களது கருத்து என்ன?

பிரவீன் அம்ரெ: ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் தனது சக அணி வீரரான அஜிங்கியா ரஹானேவுடன் இணைந்து சிறப்பான பங்களிப்பை வழங்கிவருகிறார். அதிலும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்தின் 29 ரன்கள் மிகவும் முக்கியமான ஒன்று. அது அவரது நம்பிக்கையை அதிகரித்திருக்கும். மேலும் அவரது திறன் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். ஆஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்டில் சதமடித்த வீரர், அதனால் அவர் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி: 2ஆவது டெஸ்டில் சஹாவிற்குப் பதிலாக ரிஷப் பந்தை தேர்ந்தெடுத்தது சரியான தேர்வாக இருந்ததா?

பிரவீன் அம்ரே:இங்கிருந்து எங்களால் எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் யார் விளையாட்டில் சிறப்பாக இருக்கிறார்கள், அணிக்கு எது நல்லது, அவர்களிடமிருந்து அணிக்கு எந்த வகையில் பலன் கிடைக்கும் என்பது அணி நிர்வாகத்திற்குத்தான் தெரியும்.

கேள்வி: டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பந்த், ஒருநாள், டி20 போட்டிகளில் அதனைச் செய்வதில்லை என்று நினைக்கிறீர்களா?

பிரவீன் அம்ரே: டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகவே நானும் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் களத்தில் இருக்க முடியும் என்பதால், அவர் தனது நல்ல ஷாட்டுகளுக்காக காத்திருந்து விளையாடுகிறார். அதேபோல் அவர் ஒருநாள், டி20 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்தான். அதற்கான அனுபவத்தையும் அவர் பெற்றுள்ளார். இது அவருக்கான நேரம். அதனால் இனிவரும் காலங்களில் அவர் இந்தியாவின் அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் முக்கிய வீரராக இருப்பார்.

கேள்வி: ரிஷப் பந்தின் விக்கெட் கீப்பிங் திறனை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

இந்திய அணிக்காக அதிக கேட்ச்சுகளைப் பிடித்த விக்கெட் கீப்பர்களில் ரிஷப் பந்தும் ஒருவர். அவர் கடினமான சூழலிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு, இதில் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு எப்போதும் இடமுண்டு.

இதையும் படிங்க: IND vs AUS: லாபுசாக்னே, புகோவ்ஸ்கி அரைசதம்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!

ABOUT THE AUTHOR

...view details