தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Exclusive: மோன்டி பனேசரின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த சச்சின்! - மோன்டி பனேசரின் சிறந்த டி20 அணி

தற்போதைய நவீன கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களாக கொண்டாடப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மோன்டி பனேசரின் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை.

Monty Panesar all time Test, ODI, T20 team
Monty Panesar all time Test, ODI, T20 team

By

Published : Jun 23, 2020, 2:27 AM IST

இங்கிலாந்து அணியின் முன்னாள் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மோன்டி பனேசர். இவர் இங்கிலாந்து அணிக்காக 2006 முதல் 2013 வரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 167 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில், நமது ஈடிவி பாரத்திற்கு இவர் அளித்த பிரத்யேக பேட்டியில் தனது ஆல்டைம் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளை அவர் தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்த அணிகள் பின்வருமாறு:

மோன்டி பனேசரின் ஆல்டைம் சிறந்த டெஸ்ட் அணி:

  1. கேப்டன்: ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)
  2. தொடக்க வீரர்கள்: மேத்யூ ஹெய்டன் (ஆஸ்திரேலியா), அலெஸ்டர் குக் (இங்கிலாந்து)
  3. மிடில்ஆர்டர் பேட்ஸ்மேன்கள்: பாண்டிங் (ஆஸ்திரேலியா), சச்சின், டிராவிட் (இந்தியா), கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா)
  4. பந்துவீச்சாளர்கள்: ஷான் பொலாக் (தென் ஆப்பிரிக்கா), வார்னே (ஆஸ்திரேலியா), வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்), டேரன் காஃப், ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)

தற்போதைய நவீன கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களாக கொண்டாடப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை மோன்டி தனது அணியில் தேர்வு செய்யாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோன்டி பனேசரின் ஆல்டைம் சிறந்த ஒருநாள் அணி:

  1. கேப்டன்: தோனி (இந்தியா)
  2. தொடக்க வீரர்கள்: சனத் ஜெயசூர்யா (இலங்கை), சையத் அன்வர் (பாகிஸ்தான்)
  3. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்: அரவிந்த டி சில்வா (இலங்கை), சச்சின், சேவாக், தோனி (இந்தியா) ஃபிளின்டாப் (இங்கிலாந்து)
  4. பந்துவீச்சாளர்கள்: ஹர்பஜன் சிங் (இந்தியா), முத்தையா முரளிதரன் (இலங்கை), பிரெட் லீ (ஆஸ்திரேலியா), சோயப் அக்தர் (பாகிஸ்தான்)

மோன்டி பனேசரின் ஆல்டைம் சிறந்த டி20 அணி:

இவரது டெஸ்ட், ஒருநாள் அணிகளில் இடம்பிடிக்காத விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர்.

  1. கேப்டன்: விராட் கோலி (இந்தியா)
  2. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள்: வார்னர் (ஆஸ்திரேலியா), ஜேசன் ராய் (இங்கிலாந்து)
  3. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்: கோலி (இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஆண்ட்ரே ரசல் (வெஸ்ட் இண்டீஸ்)
  4. பந்துவீச்சாளர்கள்: ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), மிட்சல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), மலிங்கா (இலங்கை), ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து)

ABOUT THE AUTHOR

...view details