இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த். ஐபிஎல் தொடரில் சூதாட்டப் புகாரில் சிக்கி யதையடுத்து, அவர் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டார். இவர் ஈ டிவி பாரத்திற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் ஏராளமான விஷயங்கள் பற்றி பேசினார்.
அதில் தனக்கும் தோனிக்கும் இடையேயான உறவு பற்றி பேசிய விஷயங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. அந்தப் பேட்டியில், '' உலகக்கோப்பைத் தொடரின்போது இங்கிலாந்து - இந்தியா ஆட்டத்தில் தோனி சரியாக ஆடவில்லை. அவர் வேண்டுமென்றே ரன்கள் சேர்க்க திணறினார் என்பது போன்ற கருத்துக்களை இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஸ்ரீசாந்த் சிறப்புப் பேட்டி தோனி போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை இப்படி பேசுவது தவறு. இதற்காக பென் ஸ்டோக்ஸ் தோனியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இங்கிலாந்து அணி உலகக்கோப்பையில் எப்படியோ வென்றுவிட்டது. அதற்காக ஸ்டோக்ஸ் மகிழ்ச்சியடையலாம். ஆனால் தோனியைப் பற்றி அவர் கருத்து தேவையில்லாதது.
நான் தோனியிடம் பேசி வெகு நாள்களாகிவிட்டது. கடைசியாக ராஜஸ்தான் அணிக்காக சென்னை அணியை எதிர்த்து ஆடியபோது பேசினேன். எப்போது அவர் எனக்கு ''தோனி பாய்'' தான். சகோதரரைப் போன்றவர். அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உள்ளது.
தோனியின் ஓய்வு முடிவை அவரிடம் விட்டுவிட வேண்டும். 38 வயதிலும் அவர் ஃபிட்டாக உள்ளார். ஜாம்பவான் வீரருக்கான மரியாதையை அவருக்கு கொடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.