இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தில் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நேற்று தர்மசாலாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஈடிவி பாரத்திற்குப் பேட்டியளித்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமல், இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
உள்ளூர் போட்டிகள்:
இது குறித்து பேசிய அருண் துமல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் போட்டிகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் இந்தக் கூட்டத்தின்போது இமாச்சலப் பிரதேச மாநில நிதி அமைச்சராக உள்ள அனுராக் தாக்கூரும் முதல் முறையாக பங்கேற்றார். இக்கூட்டத்திற்கு வருகைதந்த அனுராக் தக்கூருக்கு இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்கம் சார்பில் கௌரவிக்கப்பட்டார்.
ஹெச்.பி.சி.ஏ. மைதானம்:
தொடர்ந்து பேசிய அருண் துமல், கரோனா வைரஸ் காரண்மாக ஹெச்.பி.சி.ஏ. கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் உள்ளனர். இருப்பினும் வரவுள்ள உள்ளூர் தொடர்களில் பார்வையாளர்களை அனுமதிக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறோம்.