தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

EXCLUSIVE: ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதமுடன் ஓர் உரையாடல்! - Bhajji

கர்நாடக ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம் தனது லாக்டவுன் நாள்கள், ஐபிஎல் தொடர், கேபிஎல் என தனது கிரிக்கெட் அனுபவங்களை ஈடிவி பாரத் செய்திகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அவரின் பிரத்யேக பேட்டி இதோ...

exclusive-all-rounder-krishnappa-gowtham-in-conversation-with-etv-bharat
exclusive-all-rounder-krishnappa-gowtham-in-conversation-with-etv-bharat

By

Published : Jun 20, 2020, 3:31 AM IST

2019ஆம் ஆண்டுக்கான கர்நாடகா ப்ரீமியர் லீக் தொடரில் சிவமூகா லயன்ஸ் அணிக்கு எதிராக பெல்லாரி டஸ்கர்ஸ் அணி ஆடியது. அந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி கேபிஎல் வரலாற்றில் 39 பந்துகளில் சதமடித்து அசத்தினார் கிருஷ்ணப்பா கவுதம். அந்த இன்னிங்ஸின் இறுதியில் 56 பந்துகளில் 134 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 106 ரன்களை பவுண்டரிகள், சிக்சர்களால் மட்டுமே எடுத்திருந்தார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சில குறிப்பிடத்தக்க இன்னிங்ஸ்களில் ஆல்ரவுண்டராக களமிறங்கிய இவரை, இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் அணி வாங்கியது.

கர்நாடகா ஆல் - ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம்

ஐபிஎல் தொடரில் சக கர்நாடக வீரரான கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்க காத்திருந்தவருக்கு, கரோனா வைரஸ் தற்காலிக ஓய்வு கொடுத்துள்ளது. இந்த எதிர்பாராத நெடுநாள் ஓய்வினை குடும்பத்தினரோடு செலவழித்துவருகிறார் கிருஷ்ணப்பா கவுதம். அவர் தனது அனுபவங்களை ஈடிவி பாரத்துடன் பகிர்ந்துள்ளார். அவை பின்வருமாறு:

லாக்டவுன் நாள்கள் எப்படி இருக்கிறது? உங்கள் பெயரை பாஜி என ஏன் அழைக்கிறார்கள்?

லாக்டவுனில் எனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டுவருகிறேன். பாஜி என்று நண்பர்கள் அழைப்பார்கள். நான் இந்திய அணியின் ஹர்பஜன் சிங் போல் பந்துவீசுவேன். அதனால் என்னை அப்படி அழைப்பார்கள்.

கர்நாடகா ப்ரிமியர் லீக் - இந்தியன் ப்ரீமியர் லீக். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஐபிஎல் தொடரில் சர்வதேச தரத்திலான வீரர்களுடன் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். ஆனால், கர்நாடகா ப்ரீமியர் லீக் தொடரில் உள்ளூரின் திறமையான வீரர்களுடன் விளையாடுவோம். கேபிஎல் தொடரில் பல இளம் வீரர்களுடன் ஆடும்போது நமது அனுபவம் பயன்படும். இரண்டு தொடர்களும் வெவ்வேறு விதமானது.

கிருஷ்ணப்பா கவுதம்

கிங்ஸ லெவன் அணிக்காக ஆடப்போவதை எப்படி உணர்கிறீர்கள்?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் நான்கு கர்நாடக வீரர்கள் உள்ளோம். மயாங்க் அகர்வால், கருண் நாயர், கேஎல் ராகுல், ஜெகதீஷ் சுசுத் ஆகியோர் ஆடுகிறார்கள். அதனால் கிங்ஸ் லெவன் அணி மினி கர்நாடக அணியைப் போலத்தான் உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆவலாக இருக்கிறேன். பல ஆண்டுகளாக நாங்கள் ஒரே அணிக்காக ஆடுவதால் எங்களுக்குள் நல்ல டீம் பாண்டிங் உள்ளது. அதனால் பல போட்டிகளை வென்றுள்ளோம். பல போட்டிகளில் தோல்விய்டைந்துள்ளோம். அதனால் கிங்ஸ் லெவன் அணியில் ஆடுவது மகிழ்ச்சியே.

கிருஷ்ணப்பா கவுதமுடன் ஒரு உரையாடல்

உங்களைப் பொறுத்தவரையில் யார் மிகவும் கடினமான பேட்ஸ்மேன்&பந்துவீச்சாளர்?

நான் பவர்-ப்ளே ஓவர்களில் பந்துவீசுவதால், எனது பந்துகளில் அதிக ரன்கள் சேர்க்கப்படும். எனது பந்துகளைப் பலரும் அடித்து நொறுக்கியுள்ளனர். ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் சிறப்பாக எதிர்கொண்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் விராட் கோலிதான் சிறந்த பேட்ஸ்மேன்.

பார்வையாளர்கள் இல்லாமல் மூடப்பட்ட மைதானங்களில் விளையாடுவதன் உணர்வு எப்படி இருக்கும்?

பார்வையாளர்கள் இல்லாமல் மூடப்பட்ட மைதானங்களில் கிரிக்கெட் ஆடுவது வித்தியாசமாக இருக்கும். ஆனால், ரஞ்சி டிராபி போட்டிகளை நாங்கள் பார்வையாளர்கள் இல்லாமலேயே ஆடுவோம். அதனால் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. ஆனால் ஐபிஎல் தொடர் அல்லது சர்வதேச போட்டிகளில் ரசிகர்களின் தாக்கம் அதிகமாக உணரப்படும். எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ABOUT THE AUTHOR

...view details