ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டராக இருந்தவர் எரிக் ஃப்ரீமேன். இவர் 1968ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.
இரண்டு ஆண்டுகள் மட்டும் கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெற்றிருந்த ஃப்ரீமேன், இடைபட்ட காலங்களில் அடிலெய்ட் கால்பந்து கிளப் அணிக்காகவும் விளையாடிவந்தார். மொத்தம் 116 கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ள ஃப்ரீமேன், 81 கோல்களை அடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்த ஃப்ரீமேன், இன்று மரணமடைந்தார். இத்தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “முன்னாள் டெஸ்ட் ஆல்ரவுண்டர் எரிக் ஃப்ரீமேன் காலமான செய்தி எங்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் 1968ஆம் ஆண்டு கபாவில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 244ஆவது டெஸ்ட் வீரராக அறிமுகமானார்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:பயிற்சி ஆட்டத்தில் சதமடித்தது எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது - ரிஷப் பந்த்