தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'உள்நாட்டுத் தொடரில் கவனம் செலுத்துவதில் சவால்...!' - டெஸ்ட் சாம்பியன்ஷிப்

பெங்களூரு: உள்நாட்டுத் தொடர்களில் வீரர்களைக் கவனம்செலுத்தக் கூறுவதில் சவால் ஏற்பட்டுள்ளது என ஐசிசி கிரிக்கெட் குழுத்தலைவர் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

Everybody wants to play Test cricket, believes Kumble
Everybody wants to play Test cricket, believes Kumble

By

Published : Jan 17, 2020, 7:15 PM IST

2023ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் டெஸ்ட் போட்டிகளின் நாள்களை நான்கு நாள்களாகக் குறைப்பதற்கு ஐசிசி கிரிக்கெட் கமிட்டி ஆலோசனை நடத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே பெங்களூருவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஐசிசி கிரிக்கெட் குழுத்தலைவர் கும்ப்ளே கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''அனைத்து வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதில் ஆர்வமாக உள்ளனர். அதேபோல் இந்தத் தலைமுறை கிரிக்கெட்டர்கள் அனைவரும் டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாள்கள் நடக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் உள்நாட்டுத் தொடர்களில் இளம் வீரர்கள் கவனம் செலுத்தக் கூறுவதில் சவால் ஏற்பட்டுள்ளது.

அதற்கு மிக முக்கியக் காரணம் டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி. தற்போது சில வீரர்கள் மட்டுமே மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடிவருகின்றனர்.

இளம் வீரர்களுக்கு ஒன்றை மட்டுமே கூற விரும்புகிறேன். நீங்கள் வேறு யாரையும் பார்க்க வேண்டாம். தேர்வுக்குழுவினர் அணியிலிருந்து வெளியேற்றுவதற்காகத்தான் உள்ளனர். வீரர்களைத் தேர்வுசெய்வதற்காக அல்ல. வேறு யார் தேர்வுசெய்கிறார்கள் எனக் கேட்டால், நீங்கள்தான் உங்கள் திறமையின்மூலம் தேர்வுசெய்ய வைக்கிறீர்கள்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்திய அணியின் 87 வயது ரசிகை காலமானார் - பிசிசிஐ இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details