இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்பவர் டாம் பான்டன். தற்போது பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறார்.
இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கு சமீபத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனையின் முடிவில் டாம் பான்டன் உள்பட மேலும் இரண்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்திதொடர்பாளர் சமி பர்னே உறுதிசெய்துள்ளார்.