இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் ஜீதன் பட்டேல், “துணைக் கண்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால், சுழற்பந்துவீச்சுக்குப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் நன்கு அறிந்துகொண்டுள்ளோம். ஏனெனில் சென்னையில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டி மிகவும் சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது.
சென்னை மைதானத்தைப் பொறுத்தவரை, வேகம் அவ்வளவாக இல்லை என்றாலும், நன்றாக ‘ஸ்விங்’ ஆகிறது. இதை வைத்தே துணைக்கண்டத்தில் எவ்வாறு பந்துவீசுவது என்பதைத் தெரிந்துகொண்டோம்.