இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. நியூசிலாந்து அணி இறுதிப்போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ள நிலையில், இறுதி போட்டியில் விளையாட இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிடையே போட்டி நிலவிவருகிறது.
இதில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவை பொறுத்தே இறுதி போட்டியில் விளையாடும் மற்றொரு அணி எது என்பது உறுதியாகும். இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி முதல் இடம் பிடித்துள்ளது. அந்த அணி கடைசியாக விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் ஆறு வெற்றியும், இரண்டு போட்டிகள் டிராவிலும் முடிவடைந்தது.
இங்கிலாந்து அணிக்கெதிராக மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2 வெற்றிகளையும், ஒரு போட்டியை டிராவில் முடித்தால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போட்டி ஊதியத்தை உத்தரகண்ட் மீட்பு பணிக்கு அளிக்கும் ரிஷப்!