கரோனா வைரஸுக்கு மத்தியில் நடைபெறும் முதல் சர்வதேச டி20 தொடராக இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் அமைந்துள்ளது. முன்னதாக, இத்தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக 16.3 ஓவர்களுடன் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டியான இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நகரில் இன்று (ஆக.30) நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
மேலும் இந்த போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளிலும் எந்த மாற்றமும் இன்றி களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.