இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றதால் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இதைத்தொடர்ந்து இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 369 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்கள் எடுத்தன. இதனால் 172 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.