தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

4 அணிகளுக்கு இடையிலான சூப்பர் கோப்பை தொடருக்கு நாங்கள் தயார்! - இங்கிலாந்து அறிவிப்பு

இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேலும் ஒரு சிறந்த அணி என நான்கு அணிகளுக்கு இடையேயான சூப்பர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற பிசிசிஐயுடன் ஆலோசனை நடத்த தயாராக இருப்பதாக இங்கிலாந்து, வேல்ஸ் வாரியம் அறிவித்துள்ளது.

ECB ready to discuss BCCI's 4-nation plan, CA yet to comment
ECB ready to discuss BCCI's 4-nation plan, CA yet to comment

By

Published : Dec 24, 2019, 10:33 PM IST

ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, மேலும் ஒரு அணி என நான்கு அணிகளுக்கு இடையிலான சூப்பர் கோப்பை ஒருநாள் தொடர் 2021இல் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். இவரது இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தத் தொடரை எதிர்நோக்கி மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதேசமயம் 1993-க்கு பிறகு மூன்று அணிகளுக்கு மேல் ஒருநாள் தொடரில் விளையாட ஐசிசி அனுமதி வழங்கியதில்லை.

இறுதியாக, 1993இல் இந்தியாவில் நடைபெற்ற சூப்பர் கோப்பை தொடரில் இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐந்து அணிகள் பங்கேற்றன. அதில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், ஐசிசியின் அனுமதியுடன் மீண்டும் நான்கு அணிகளுக்கு ஒருநாள் தொடர் நடைபெறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், இந்தத் தொடர் நடைபெறுவது குறித்து இங்கிலாந்து, வேல்ஸ் வாரியம் கூறுகையில், "நாங்கள் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர்களைச் சந்தித்து, போட்டியை மேம்படுத்துவதற்கான ஆலோசனை நடத்திவருகிறோம். அப்படி இம்மாதம் தொடக்கத்தில் பிசிசிஐயுடன் நடந்த ஆலோசனையின்போது, நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சூப்பர் கோப்பை குறித்து பேசப்பட்டது. இந்தத் தொடர் நடைபெறுவதற்கு பிசிசிஐயுடன் ஆலோசனை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்" என உறுதி செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியா இது குறித்து இன்னும் தங்களது கருத்தை தெரிவிக்கவில்லை என கங்குலி தெரிவித்தார். 2021ஆம் ஆண்டை பொறுத்தவரையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்திலும் அதே ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் இந்தியாவிலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோலியின் செஞ்சுரி வேட்டை தொடங்கிய நாள்!

ABOUT THE AUTHOR

...view details