சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் பத்தாண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரரைத் தேர்வுசெய்து விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2011- 2020ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்குப் பரிந்துரைசெய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஐசிசி அறிவித்திருந்தது.
இதையடுத்து ஐசிசியின் கடந்த பத்தாண்டுகளில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கனவு அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஒருநாள் & டி20 கனவு அணி
இதில் ஐசிசியின் ஒருநாள், டி20 அணியின் கேப்டன், விக்கெட் கீப்பராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஒருநாள், டி20 கனவு அணியில் இந்தியாவின் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும், டி20 கனவு அணியில் ஜஸ்பிரித் பும்ராவும் இடம்பெற்றுள்ளனர்.
ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), விராட் கோலி (இந்தியா), ஏபிடி வில்லியர்ஸ் (தெ.ஆப்பிரிக்கா), ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்), எம்.எஸ். தோனி (கே), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), டிரெண்ட் போல்ட் (நியூசிலாந்து), இம்ரான் தாஹீர் (தெ.ஆப்பிரிக்கா), லசித் மலிங்கா (இலங்கை).
டி20 அணி: ரோஹித் சர்மா (இந்தியா), கிறிஸ் கெய்ல் (வெ.இண்டீஸ்), ஆரோன் ஃபின்ச் (ஆஸ்திரேலியா), விராட் கோலி (இந்தியா), ஏபிடி வில்லியர்ஸ் (தெ.ஆப்பிரிக்கா), கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), எம்.எஸ். தோனி (கே), பொல்லார்ட் (வெ.இண்டீஸ்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), லசித் மலிங்கா (இலங்கை)
இதையும் படிங்க:பாகிஸ்ங் டே டெஸ்ட்: டூ பிளெசிஸ், பவுமா நிதான ஆட்டம்!