ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ். 59 வயதாகும் இவர், வர்ணனையாளராக பல போட்டிகளில் பங்கேற்றவர். இவரது வர்ணனைகள் உலகக்கோப்பைத் தொடரின் போது ரசிகர்களிடையே பிரபலமடைந்தது.
வர்ணனை என்பது வெறும் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் பவுண்டரிகளுக்குப் பில்டப் வார்த்தைகள் கொடுப்பது எல்லாம் கடந்து, ரசிகர்கள் பார்க்கும் போட்டியில் அவர்களுக்கு தெரியாத விஷயங்கள் பற்றி கதையாக கூற வேண்டும். அந்த வகையில் வர்ணனை என்னும் கலையை முழுமையாக கற்று, தனித்துவத்துடன் செய்து வந்தவர் டீன் ஜோன்ஸ்.
இவருக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கும் ஒரு பெரிய கனெக்ஷன் உண்டு. கடந்த 1986ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் சென்னை மைதானத்தில் ஆடியப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆலன் பார்டர் - டீன் ஜோன்ஸ் இணை இந்திய பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்தனர்.