நடைபெற்று வரும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் சில லீக் போட்டிகளே உள்ள நிலையில், அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய இரு அணிகள் மட்டுமே உறுதி செய்துள்ளன.
இந்நிலையில், கேன் வில்லியம்சன் தலமையிலான நியூஸிலாந்து அணியும் கிட்டத்திட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 8 ஆட்டங்களில் விளையாடிய அந்த அணி 5ல் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி ரத்து என மொத்தம் 11 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
மோர்கன் தலமையிலான இங்கிலாந்து அணி விளையாடிய 8 போட்டிகளில் 5ல் வெற்றியும் 3ல் தோல்வியையும் சந்தித்து 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிப் பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியை பொறுத்த வரையில் அதிரடி ஆட்டகாரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜொஸ் பட்டலர் போன்றவர்கள் பேட்டிங்கில் பலம் சேர்ப்பார்கள். பந்துவீச்சில் ஜொஃப்ரா ஆர்ச்சர், கிரிஸ் வோக்ஸ் ஆகியோரின் வேகம் இன்று கைகொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.