மூன்றாவது லீக் ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலியா அணியும், தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடிய பாகிஸ்தான் அணியும் டவுன்டனில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
CWC19: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை! - பாகிஸ்தான்
உலகக்கோப்பை தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பை தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 16 போட்டிகளில் மூன்று போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. இந்தப் போட்டியும் மழையால் கைவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார்.
பலம்வாய்ந்த இரு அணிகள் மோதவுள்ளதால் இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு அணி பேட்ஸ்மேன்களும் அபாரமான ஃபார்மில் இருப்பதால் இந்த ஆட்டத்தில் அதிகமாக ஸ்கோர் பதிவாகும் என கிரிக்கெட் பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.