கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இதுவரை உலகம் முழுவதும், ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இதனால் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அந்தவகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், கடந்த 24ஆம் தேதி 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனை ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்க பிசிசிஐயும் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். ஐபிஎல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
"கடந்த 15 நாள்களாக நான் கிரிக்கெட்டைப் பற்றி துளியும் சிந்திக்கவில்லை. நாட்டு மக்களைவிட கிரிக்கெட் ஒன்றும் பெரிதானது அல்ல. நான் ஐபில் அல்லது கிரிக்கெட்டைப் பற்றி தற்போது சிந்தித்தால் நான் சுயநலவாதியாகத்தான் இருப்பேன்.