தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் ஒத்திவைப்பு! - இங்கிலாந்து - ஆஸ்திரேலியா

மெல்போர்ன்: வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடக்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

cricket-australia-announces-postponement-of-t20i-series-against-windies
cricket-australia-announces-postponement-of-t20i-series-against-windies

By

Published : Aug 4, 2020, 9:45 PM IST

அக்டோபர் மாதத் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்கவிருந்தது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கு முன்னதான நடக்கும் பயிற்சி ஆட்டம் போல் இரு அணிகளும் ஆடவிருந்தன.

ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2021 அல்லது 2022இல் நடக்கும். இந்த முடிவுக்கு இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் சம்மதித்துள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இதனிடையே, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தென் ஆப்பிரிக்காவைத் தவிர்த்து அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிங்க:என்னை ரூ.1.71 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய முன்வந்தனர்: சோயப் அக்தர்

ABOUT THE AUTHOR

...view details