சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடி மன்னன் என்ற பெயரைப் பெற்றவர் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில். இவர் இதுவரை டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், 20-க்கும் மேற்பட்ட சதங்களையும் விளாசியுள்ளார். மேலும் ஐபிஎல், சிபிஎல், பிக் பேஷ், பிஎஸ்எல், பிபிஎல் என உலகின் பல்வேறு வகையான டி20 தொடர்களிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பல்வேறு அணிகளில் விளையாடியுள்ள கெயில், கடந்த ஆண்டு ஜமைக்கா தல்லாவாஸ் (Jamaica Tallawahs) அணிக்காக விளையாடிவந்தார். இந்நிலையில் இந்தாண்டுக்காக சிபிஎல் தொடர் வீரர்கள் ஏலத்தில், கெயிலை ஜமைக்கா அணி விடுவித்துள்ளது.
இதனையடுத்து செயிண்ட் லூசியா ஸாக்ஸ் அணி கெயிலை தங்களது அணிக்காக ஏலத்தில் எடுத்துள்ளது. இது குறித்து செயிண்ட் லூசியா அணியின் கேப்டன் டேரன் சமி கூறுகையில், "கெயிலை எங்களது அணியில் பார்ப்பதற்கு, ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.