கடந்தாண்டு ஜூலை 14இல் லார்ட்ஸில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, பவுண்டரி கணக்கு விதிப்படி சாம்பியன் பட்டத்தை வென்றது.
சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் நியூசிலாந்து அணிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டாவது ரன் ஓட முயற்சிக்கும்போது நியூசிலாந்து வீரர் மார்டின் கப்திலை இங்கிலாந்து அணியின் விக்கெட்கீப்பர் ஜாஸ் பட்லர் ரன் அவுட் செய்தார். இதனால்தான் இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை கிடைத்தது.
இந்நிலையில், கோவிட்-19 தொற்றுக்கு நிதி திருட்டும்விதமாக இந்தப் போட்டியில் பயன்படுத்திய சிறப்புமிக்க ஜெர்சியைத்தான் (டி ஷர்ட்) ஏலத்தில் விடப்போவதாக பட்லர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி வெளியிட்ட அவர், "ஹலோ ரசிகர்களே, நீங்கள் அனைவரும் உங்களது வீட்டில் பாதுகாப்புடன் இருக்கிறீர்கள் என நம்புகிறேன். கோவிட் 19 தொற்று தடுப்பு நடவடிக்கையில் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். எதிர்வரும் நாள்களில் அவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.