கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்திய அரசு பொதுமக்களை வெளியில் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பிரமர் நரேந்திர மோடியும், மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கைப் பின்பற்றவேண்டுமெனவும் வேண்டுகோள்விடுத்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இந்திய கிரிக்கெ அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் இணைந்து, தங்களது ட்விட்டரில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். இது குறித்து அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொலியில், "நாம் அனைவரும் தற்போது மிகவும் கடினமான சூழ்நிலையைச் சந்தித்துவருகிறோம். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரேவழி நாம் ஒன்றாகச் செயல்படுவதே.