தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 19, 2019, 7:11 PM IST

ETV Bharat / sports

ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!

துபாய் : மூளையில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் கான் டி லாங் நேற்று உயிரிழந்தார்.

Con de Lange

தென்னாப்பிரிக்காவில் பிறந்த கான் டி லாங், இதுவரை ஸ்காட்லாந்து அணிக்காக 21 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 2015ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரானப் டி-20 போட்டியின்போது அறிமுகமான இவர், ஸ்காட்லாந்து அணிக்காக ஆல்-ரவுண்டராக சிறந்த பங்களிப்பை கொடுத்து வந்தார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரானப் போட்டியில் ஸ்காட்லாந்து அணி முதல் முறையாக ஒருநாள் போட்டியை வென்று சாதனைப் படைத்தது. அந்தப் போட்டியில் கான் டி லாங் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்காட்லாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இதனையடுத்து ஸ்காட்லாந்து அணிக்காக ஐந்து போட்டிகளில் ஆடிய கான் டி, அதன் பின்னர் உடல்நலப் பிரச்சையால் அணியிலிருந்து வெளியேறினார். பின்னர் கான் டி லாங்-க்கு மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் தனது டிவிட்டர் பக்கத்தில், ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் கான் டி லாங் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம் எனப் பதிவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details