கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 27 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டில் உள்ள முக்கிய பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அனுஷ்காவும் நானும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு(மகாராஷ்டிரா) எங்களது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளோம். மேலும் இப்பெருந்தொற்றால் பதிக்கப்பட்டவர்களைக் காணும்போது எங்களது இதயம் உடைகின்றது. எங்களது பங்களிப்பு ஒரு விதத்தில் அவர்களது துன்பங்களைப் போக்க உதவும் என்று நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக விராட் கோலி&அனுஷ்கா ஷர்மா இருவரும் இணைந்து பொதுமக்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திகொள்ளுமாறும், தங்களை முடிந்த அளவிற்கு பாதுகாத்துக் கொள்ளுமாறும் காணொலி மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதையும் படிங்க:கோபி பிரைன்ட் துண்டிற்கு இவ்வளவு மதிப்பா? - வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்