கோவிட்-19 பெருந்தொற்றால் உலக நாடுகள் பல அச்சத்தில் இருந்துவரும் நிலையில், பல நாடுகளும் இதிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொண்டும் வருகின்றனர்.
அந்தவரிசையில் தென் ஆப்பிரிக்க அணியின் ஃபீல்டிங் ஜம்பவானான ஜான்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் சுயத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில் ரோட்ஸ், தனது மனைவி, குழந்தைகளுடன் உடற்பயிற்சி மேற்கொள்ளும் காணொலியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.