திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சேர்ந்தவர் லட்சுமணன் என்கின்ற லட்சுமணகாந்தன். தனது 5 வயதில் இளம்பிள்ளை வாதம் நோய் தாக்கியதில், இவரது இடது கை மற்றும் இடது கால் பாதிப்படைந்து. இவரது மனைவி காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு நவீன் பாலாஜி என்ற மகனும் உள்ளார்.
மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் லட்சுமணகாந்தன் லட்சுமணனுக்கு சிறுவயது முதலே கிரிக்கெட்டின் மீது தீராத ஆர்வம். அதன் தொடர்ச்சியாக எங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் ஆர்வத்துடன் பார்க்க சென்றுவிடுவார். மேலும் கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவருடைய மகனுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்க தனிநபர்களின் பங்களிப்போடு காங்கேயத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து, மகனுக்கும் மற்ற கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும் பயிற்சி அளிப்பதோடு மாற்றுத்திறனாளியான லட்சுமணகாந்தனும் இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
ஆட்சியரிடன் உதவி பெற்ற லட்சுமணகாந்தன் இதனை கண்ட அரியலூர் கிரிக்கெட் பயிற்சியாளர் வெங்கடேஷ் என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் வரும் நவம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ள மாற்றுத் திறனாளி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாடுவதற்கு கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற தேர்வில் கலந்துகொண்டு தேர்வாகியுள்ளார்.
டிபிஎல் தொடருக்கு தேர்வான லட்சுமணகாந்தன் துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் தொடரில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் என ஐந்து அணிகள் விளையாட உள்ளது. இப்போட்டிகளில் தமிழக அணியான சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்காக லட்சுமிகாந்தன் விளையாட உள்ளார்.
இதுகுறித்து லட்சுமிகாந்தன் கூறுகையில், “எனது மகனுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த நிலையில், எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த போட்டிகளில் திறமையை வெளிப்படுத்துவேன். பந்துவீச்சில் எனது பலமே ஆப் ஸ்பின் தான். நான் தற்போது வரை எனது மகன் உள்பட இளைஞர்களுக்கு பந்துவீசி பயிற்சி எடுத்து வருகிறேன்.
சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடும் வீரர்கள் பட்டியல் இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பந்துவீச மிக எளிதாக இருக்கும். துபாயில் விளையாடுவதற்கு தமிழ்நாடு அணி சார்பில் திருப்பூரில் இருந்து நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதனால் தற்போது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து துபாய் சென்று வருவதற்கான நிதியுதவி கோரியுள்ளேன்.
இன்று மகனுக்கு பயிற்சியாளர்; நளை தமிழ்நாட்டின் போட்டியாளர் மாவட்ட ஆட்சியரும் என்னை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார். என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக விளையாடி அடுத்த கட்டமாக இந்திய மாற்றுத்திறனாளிகள் அணிக்கு தேர்வாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” என்று தெரிவித்தார்.
லட்சுமணகாந்தின் முயற்சிகள் வெற்றியைடை நம்முடைய வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.
இதையும் படிங்க:'கை இல்லாட்டி என்னங்க... மனசுல சாதிக்க தைரியம் இருக்கு' - மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்