உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இந்திய அணி விளையாடிவரும் ஒருநாள், டி20 போட்டிகளில் தோனிக்குப் பதிலாகரிஷப் பந்த்விளையாடிவருகிறார். தோனியின் இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால் என்னவோ கடந்த சில போட்டிகளில் ரிஷப் பந்த் ஏதேனும் தவறு செய்தால், மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் தோனியின் பெயரை அதிகம் கூச்சலிட்டு அவருக்கு ஒருவிதமான அழுத்தத்தை தருவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால், தோனியின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ரிஷப் பந்திற்கு பேராதரவு கிடைத்தது நெட்டிசன்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கே.எல். ராகுல், கேப்டன் கோலி, ரோஹித் சர்மா என டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவந்தது. இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த் ஆகியோர் தங்களது பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.