தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'வயசானாலும் கெத்து குறையல...!' - கோட் சூட்டில் கேட்ச் பிடித்து அசத்திய லக்ஷ்மண்! - 'கல்லி கிரிக்கெட்'

இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான வி.வி.எஸ். லக்ஷ்மண் சக வர்ணனையாளர்களுடன் கிரிக்கெட் விளையாடிய காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

"Finest Close-In Catch

By

Published : Oct 15, 2019, 3:52 PM IST

Updated : Oct 16, 2019, 1:47 PM IST

இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின்போது, சக வர்ணனையாளர்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ். லக்ஷ்மண் கோட் சூட் அணிந்து கிரிக்கெட் விளையாடிய காணொலியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அந்த ட்விட்டர் பதிவில் அவர் சக வர்ணனையாளர்களுடன் கோட் சூட் அணிந்து 'கல்லி கிரிக்கெட்' எனப்படும் தெருவோர கிரிக்கெட்டை விளையாடியுள்ளார். அப்போது அவர் பீல்டிங்கில் ஒரு கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.

அவர் அந்தப் பதிவில், 'இது எனது மிகச்சிறந்த கேட்ச்சுகளில் ஒன்று. ஏனெனில் முழு கோட் சூட் அணிந்து, இப்படி ஒரு கேட்சை பிடித்துள்ளேன்' எனப் பதிவிட்டு அவர் கேட்ச் பிடிக்கும் காணொலியையும் இணைத்துள்ளார்.

தற்போது அந்தக் காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தோனி முன்னிலையில் லக்ஷ்மனுக்கு தொடர்ந்து பவுன்சர் பந்துகளை வீசிய சச்சின்

Last Updated : Oct 16, 2019, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details