தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வேகப்பந்து வீச்சாளர் ஷமி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! - ஷமி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கொல்கத்தா: இந்திய அணியின் முன்னணி வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிந்து குற்றப்பத்திகை தாக்கல் செய்துள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர் ஷமி

By

Published : Mar 15, 2019, 10:17 AM IST

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான், ஷமி மற்றும் அவரது கும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி போலீஸாரிடம் புகாரளித்தார். மேலும், குடும்ப செலவுகளுக்காக மாதம் ரூ.7 லட்சம் வழங்கிடக்கோரி அலிபூர் நீதிமன்றத்தையும்நாடினார்.

இவரது கோரிக்கையை ஏற்றுதுமட்டுமல்லாமல், அதில் 80 ஆயிரத்தை அவரது பெண் குழந்தைக்கும் ஒதுக்கியது.

தற்போது, கொல்கத்தா போலீஸார்ஹசின் ஜஹான்அளித்த புகாரின் அடிப்படையில், ஷமி மீது வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திர்க்கை தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷமியின் வழக்கறிஞர் பேசுகையில், இந்த குற்றசாட்டினை சட்டப்படி சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பைத் தொடர்கள் அடுத்தடுத்து வரவுள்ளதால் இந்த வழக்கு ஷமியின் விளையாட்டில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details