இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் விவிஎஸ் லக்ஷ்மன். இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை வெல்ல முக்கியக் காரணம் யுவராஜ் சிங் மட்டுமே எனப் பதிவிட்டுள்ளார்.
'உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் உலகக்கோப்பை வாங்கித் தந்தவர் யுவராஜ்'
2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது, தனது உடல்நிலை குறித்து கவலை கொள்ளாமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றவர் யுவராஜ் சிங் என இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் பாராட்டியுள்ளார்.
carried-the-team-on-his-shoulders-at-the-2011-world-cup-when-gravely-unwell-laxman-pays-tribute-to-yuvraj
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”யுவராஜ் சிங் வெற்றிகரமாக புற்றுநோயிலிருந்து மீண்டு, அனைவருக்கும் ஒரு உத்வேகம் அளித்துள்ளார். மேலும், அவர் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின்போது தனது உடல்நிலை குறித்து சற்றும் கவலை கொள்ளாமல், அணியை தனது தோள்களில் சுமந்தவர். பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டதும் தனது அதிகபட்ச ரன்னையும் குவித்தவர். இவரின் அசைக்க முடியா தன்னம்பிக்கைக்கு எனது பாராட்டுக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.