இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் அடங்கிய டி20 தொடர் மார்ச் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான 16 பேர் அடங்கிய வீரர்கள் பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (பிப்.11) அறிவித்துள்ளது. அதில் டெஸ்ட் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த பேர்ஸ்டோவ், சாம் கர்ரன் ஆகியோர் மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில், அதிரடி வீரர்களான டேவிட் மாலன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜேசன் ராய் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து டி20 அணி: இயன் மோர்கன் (கே), மோயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், டாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், அடில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, மார்க் வுட்.
இதையும் படிங்க: இரண்டாவது டெஸ்ட் போட்டி: களைகட்டிய சேப்பாக்கம்!