தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உள்ளாடை சர்ச்சை; கூலாக பதிலளித்த பும்ரா! - கூலாக பதிலளித்த பும்ரா

ஆன்டிகுவா: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படத்தை கேலி செய்த நெட்டிசன்களுக்கு கூலாக பதிலளித்துள்ளார்.

bumrah & kholi

By

Published : Aug 26, 2019, 4:37 PM IST

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நேற்று நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன் வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஜாலி கடற்கரையில் இந்திய வீரர்கள் தங்களுக்கு பிடித்தவாறு புகைப்படங்கள் எடுத்து உற்சாகமாக இருந்துள்ளனர். அப்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் உடற்கட்டுகளை காட்டும் விதத்தில் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அந்த புகைப்படத்தை பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தைக் கண்ட நெட்டிசன்கள் பும்ராவின் உள்ளாடை குறித்து விமர்சித்தனர்.

சர்ச்சைகுள்ளான பும்ராவின் புகைப்படமும், அவரின் பதிலும்

இந்நிலையில் அவர் தனது புகைப்படத்தை கேலி செய்த நெட்டிசன்களுக்கு கூலாக பதிலளித்துள்ளார். அந்தப் பதிவில் ’நீங்கள் நினைப்பது போல எதுவுமில்லை, அது நீரில் வெயிலின் எதிரொளிப்புதான் அப்படி பிரதிபலிக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details