பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக இத்தொடரில் நடைபெற்ற மூன்ற டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் ஆஸ்திரேலியாவும், ஒரு போட்டியில் இந்திய அணியும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதனால் தொடரை வெல்வது யார் என தீர்மானிக்கும் போட்டியாக பிரிஸ்பேன் டெஸ்ட் உள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.