தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரயின் லாரா மருத்துவமனையில் அனுமதி - crikcet

மும்பை: நெஞ்சு வலி காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரயின் லாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரயின் லாரா மருத்துவமனையில் அனுமதி

By

Published : Jun 25, 2019, 4:55 PM IST

Updated : Jun 25, 2019, 5:03 PM IST

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரயின் லாரா. 50 வயதான இவர், டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் உட்பட பல சாதனைகளைப் படைத்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் நடந்து வரும் உலகக் கோப்பை போட்டிகளுக்கான வர்ணனையாளராக மும்பையிலிருந்து பணியாற்றக்கொண்டிருந்தார்.

பிரயின் லாரா மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் அவருக்கு இன்று காலை திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணியளவில் மும்பையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரயின் லாரா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Last Updated : Jun 25, 2019, 5:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details