கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் சுய தனிமைப்படுத்துதலில் இருக்கின்றனர். இந்நிலையில் பெரும்பாலான வீரர்கள் தங்களது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பாலுடன், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபேஸ்புக் நேரலை மூலம், இணைந்து கலந்துரையாடினர். அப்போது பேசிய கேன் வில்லியம்சன், தனது அணியின் முன்னாள் கேப்டனான மெக்கல்லம் இவ்விளையாட்டிற்கு கிடைத்த பரிசு என புகழாரம் சூட்டினார்.