இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பெறுவாரா? என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் அவர் செயல்படும் நிலையை பொறுத்தே அணியில் இடம்பிடிப்பாரா? மாட்டாரா? என முடிவெடுக்கப்படும் என்று தேர்வுக் குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர், தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் நடக்குமா? என்ற சந்தேகம் உள்ள நிலையில், தோனியின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறுகையில், தோனி இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய செய்திருக்கிறார். இருப்பினும் முந்தைய கடைசி பந்தும் வரலாறுதான். அதனால் எதிர்காலத்தைப் பற்றிதான் நாம் சிந்திக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அவர் டி20 உலகக்கோப்பையில் இடம்பிடிப்பார். நமக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது. அதனால் யார் வேண்டுமானலும் கருத்து தெரிவிக்க முடியும். தோனி குறித்து முடிவெடுக்க நான் சுனில் ஜோஷி (தேசிய தேர்வாளர்) அல்ல. நான் தோனியின் ரசிகன், அதனால் நான் அவரை அணியில் பார்க்க விரும்புகிறேன், ஆனால் இது எனது அழைப்பு அல்ல.
மேலும், கே.எல். ராகுல், ரிஷப் பந்து இருவரும் ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கே தேர்வுக் குழுவினர் முன்னுரிமை அளிப்பர். ஏற்கனவே தோனி மீது குற்றச்சாட்டுகளை பலரும் முன்வைத்துள்ளதால், அது தேர்வுக் குழுவினரின் முடிவுக்கு சாதகமாக அமையக்கூடும். ஐபிஎல் தொடரில் அவரின் செயல்பாட்டிற்கு பிறகே அணிக்கு திரும்புவர் என தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ஆனால் தற்சமயம் ஐபிஎல் தொடர் நடக்குமா என்பதே சந்தேகத்தில் உள்ளது.
2011 உலககோப்பைத் தொடரின் போதுதோனி ஐபிஎல் நடைபெறவில்லை என்றால், இந்திய அணி நேரடியாக உலகக்கோப்பைத் தொடருக்கு தான் செல்லும். அப்படி சென்றால் தோனியை எப்படி அணிக்குள் வரவழைப்பார்கள். இது தேர்வுக் குழுவினர் திட்டமிட்டு செய்வது. அதேபோல் தேர்வுக் குழுவில் இருப்பவர்கள் ஒருபோதும் கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணங்களை புரிந்துகொள்ள முயற்சி செய்ய மாட்டார்கள். ஒருவேளை ரசிகர்களின் எண்ணங்களை ஏற்று தோனியை அணியில் சேர்த்த பிறகு, அவரது விளையாட்டால் இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாமல் போனால் எங்கள் மீதும், இந்திய அணி மீதும் கடுமையான விமர்சனங்கள் எழும் என பதில் கூறுவார்கள். இதனால் இந்திய அணியில் தோனி மீண்டும் விளையாடுவது என்னைப் பொறுத்தவரையில் சாத்தியமற்றது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தோனிக்கு இடம் கிடைப்பது கடினம் - முகமது அசாருதின்