தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகின்றது. இவ்விரு அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடியது. இதில் மூன்றாம் நிலை வீரராகக் களமிறங்கிய ஸ்டோக்ஸ், அன்ரீஜ் நோர்டிச் பந்துவீச்சில் இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது அவர் டிரஸிங் ரூமிற்கு சென்றுகொண்டிருக்கும்போது தன்னைப்பற்றி விமர்சனம்செய்த ரசிகர் ஒருவரை ஆபாச வார்த்தைகளினால் திட்டியுள்ளார்.