தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

என்.சி.ஏ.வில் மருத்துவக் குழு... உடனடி அப்டேட்டுகளுக்கு சோசியல் மீடியா டீம்.... தாதா அதிரடி! - Ganguly and Dravid

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவக் குழு ஒன்றை நியமிக்கப்போவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

CCI to set up medical panel, hire social media expert in a bid to revamp NCA
CCI to set up medical panel, hire social media expert in a bid to revamp NCA

By

Published : Jan 3, 2020, 8:54 AM IST

பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பொறுப்பு வகிக்கிறார். பொதுவாக, காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகும் வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்குள் திரும்ப வேண்டும் என்றால், என்.சி.ஏ.வுக்குச் சென்று உடல்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதேபோல, கோலி இந்திய அணியின் கேப்டனான பிறகு யோயோ உடல்பயிற்சித் தேர்வு கட்டாயமாகிவிட்டது. இதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெறமுடியும் இந்தத் தேர்வும் என்.சி.ஏ.வில் தான் நடைபெறும். நீண்ட நாள்களாக இந்த வழிமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. ஆனால், சமீப நாள்களாக வீரர்களின் காயத்தை கையாள்வதில் என்.சி.ஏ. மீது பகீரங்க குற்றச்சாட்டு எழுந்துவந்தது.

புவனேஷ்வர் குமார்

குறிப்பாக, காயத்திலிருந்து நீண்ட நாள்களுக்குப் பின் புவனேஷ்வர் குமார் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியபோது, அவர் கடும் வயிற்று வலியில் அவதிப்பட்டார். அப்போது பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு ஹெர்னியா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தபின் ’நான் எப்போது இந்திய அணிக்குத் திரும்புவேன்’ என்பது தெரியவில்லை என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்திருந்தார். இதற்கு என்.சி.ஏ.வின் கவனக்குறைவே காரணம் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

அதேசமயம், செப்டம்பர் மாதம் காயம் காரணமாக வெளியேறிய பும்ரா என்.சி.ஏ.வில் சிகிச்சை பெறாமல் தனிப்பட்ட முறையில் சிகிச்சை பெற்றுக்கொண்டார். இதுமட்டுமில்லாமல், என்.சி.ஏ.வின் உடல்தகுதி சான்றிதழ் பெறாமலே, அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

தான் உடல்தகுதி தேர்ச்சி பெற்றுவிட்டதாக சான்றிதழ் தருமாறு பும்ரா என்.சி.ஏ. தரப்பினரிடம் கேட்க, அதற்கு டிராவிட் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி என்.சி.ஏ.விற்கு ஆதரவளித்தா. இதுபோன்ற பிரச்னைகள் இனி வராமலிருக்க சில நாள்களுக்கு முன்பு, கங்குலியும் டிராவிட்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில், என்.சி.ஏ.வில் மருத்துவக் குழு தேவை என்பது தெரியவந்துள்ளது.

என்.சி.ஏ

இந்நிலையில், என்.சி.ஏ.வில் மருத்துவக்குழு ஒன்றை அமைக்க பிசிசிஐ லண்டனைச் சேர்ந்த ஃபோர்டியஸை அணுகவுள்ளதாக பிசிசியின் உயர் அலுவர் ஒருவர் முன்னணி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, என்.சி.ஏ.வில் நீண்ட நாள்களாக காலியாக இருக்கும் வேகப்பந்துவீச்சு தலைவர் பதவிக்கும் சரியான நபர் நியமிக்கப்படவுள்ளார். அந்த நபர் என்.சி.ஏ.வில் வேகப்பந்துவீச்சு திட்டத்தை அமைக்கும் பொறுப்பில் இருப்பார்.

மேலும் ஊட்டச்சத்துத் தலைவர் பதவிக்கும் என்.சி.ஏ.வில் நடக்கும் விஷயங்களை உடனுக்குடன் பிசிசிஐக்கு தெரிவிக்க சமூக வலைதள நிர்வாகி ஒருவரையும் பிசிசிஐ தேர்வு செய்யவுள்ளது. இந்திய கிரிக்கெட் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதன்மை மையமாக என்.சி.ஏ. இருக்கும் என கங்குலி ஏற்கனவே கூறியிருந்தார். மேலும் என்.சி.ஏ.வின் புதிய வசதிகள் இன்னும் 18 மாதங்களில் தயாராக இருக்கும் என்றும் அவர் எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார். கங்குலி கொண்டுவந்துள்ள இந்த முடிவுகளின் மூலம், பிசிசிஐக்கும் என்.சி.ஏ.வுக்கும் உள்ள இடைவெளி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:டெஸ்ட் போட்டிகளின் நாள்கள் குறைக்கப்படுவதை வெறுக்கிறேன்: கிளென் மெக்ராத்!

ABOUT THE AUTHOR

...view details