இந்தாண்டு நடைபெறவிருந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ரத்து என ஐசிசி அறிவித்தவுடனே, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான பணிகளில் பிசிசிஐ களமிறங்கியது.
இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8ஆம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில், 'இந்தாண்டு ஐபிஎல் தொடரை நடத்துவதில் மட்டுமே பிசிசிஐ முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. ஆனால் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெறும் என்பதால் அணியின் உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது.