கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது கரோனா வைரஸ் காரணமாக இந்திய அணி ஜூன், ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் இலங்கை, ஜிம்பாப்வே நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த கிரிக்கெட் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜூன் 24ஆம் தேதி முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று டி20 போட்டிகளிலும் பங்கேற்கவிருந்தது. அதேபோல் ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் ஆடவிருந்தது.