இந்தியாவில் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரும் 2023இல் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரும் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா பெறுவதிலும், கிரிக்கெட் விளையாட அனுமதி வழங்குவதிலும் இந்திய அரசாங்கம் எந்தவித பிரச்னையும் ஏற்படுத்தாது என்பதை பிசிசிஐயிடமிருந்தது எழுத்துப்பூர்வமாக உத்தரவாதங்களை வழங்குமாறு ஐசிசி இடம் நாங்கள் ஏற்கனவே கேட்டுக்கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் வாசிம்கான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிசிசிஐயின் மூத்த அலுவலர் ஒருவர், கிரிக்கெட் தொடர்களை நடத்துவதில் அரசாங்கத்தின் தலையீடுகள் இருக்கக்கூடாது. அதே சமயம் கிரிக்கெட் வாரியங்களும் அரசாங்கத்தின் விஷயங்களில் ஈடுபடக்கூடாது என்பது ஐசிசியின் விதிமுறையாகும்.