யு19 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேச வீரர்கள் இடையே நடந்த கைகலப்பு பற்றியே இன்னமும் பேச்சுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இறுதிப் போட்டியில் இந்திய அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் கோப்பை வென்ற உற்சாகத்தில் வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களிடம் எல்லை மீறி நடந்துகொண்டதாலே இந்த கைகலப்பு நேரிட்டது.
வங்கதேச வீரர்கள் ஏன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டனர் என்பது குறித்து ஷோரிஃபுல் இஸ்லாம் கூறுகையில், "தோல்வி அடைந்தபோது எதிரணி உங்கள் முன் ஆக்ரோஷமாகக் கொண்டாடினால் அந்த வலியும் வேதனையும் எப்படி இருக்கும் என்பதை இந்திய வீரர்கள் உணர வேண்டும் என்பதற்காகதான் நாங்கள் அப்படி நடந்துகொண்டோம்.
2018 ஆசியக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், 2019 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும் நாங்கள் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தோம். அந்த வெற்றியை இந்திய வீரர்கள் எங்கள் கண் முன் ஆக்ரோஷமாக கொண்டாடியபோது நாங்கள் எதுவும் கூறாமல் அமைதியாகத்தான் இருந்தோம். அந்த தோல்விகளின் வலியை பற்றி என்னால் விவரமாக சொல்ல முடியாது.