தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

புகைப்படத்தால் இணையத்தை கலக்கிய வங்., வீராங்கனை! - சஞ்சிதா இஸ்லாம் புகைப்படம்

வங்கதேச கிரிக்கெட் வீராங்கனை சஞ்சிதா இஸ்லாம், புடவை, நகை அணிந்து மணப்பெண் கோலத்தில் பேட்டிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Wedding photoshoot after marriage
Wedding photoshoot after marriage

By

Published : Oct 21, 2020, 5:02 PM IST

வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை சஞ்சிதா இஸ்லாம். இவருக்கும் மிம் மொசடெக் என்ற வங்கதேச கிரிக்கெட் வீரருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வை புகைப்படங்கள் மூலம் தக்கவைக்க நினைத்த சஞ்சிதா, புடவை, நகைகளை அணிந்து மணப்பெண் கோலத்தில் கிரிக்கெட் விளையாடுவது போன்ற புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இது குறித்து ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கதில், "உடை, நகை, கிரிக்கெட் பேட். கிரிக்கெட் வீரர்களுக்கான திருமண போட்டோஷூட்கள் இப்படிதான் இருக்கும்" என பதிவிட்டு சஞ்சிதா இஸ்லாமின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. இதையடுத்து சஞ்சிதாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணியின் வீராங்கனை சஞ்சிதா இஸ்லாம், இதுவரை 16 ஒருநாள் போட்டிகள், 54 சர்வதேச டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிளே ஆஃப் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி!

ABOUT THE AUTHOR

...view details