சர்வதேச ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெறவுள்ளது. இதில், முதலில் மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. ஆடவர் அணிகளுக்கு இடையிலான தொடர் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு உலகக்கோப்பை தொடர் மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள் அரங்கில் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என உலக உள் அரங்கு கிரிக்கெட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.