ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் இன்று மெல்போர்னில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஸ்மித், லபுசாக்னே ஆகியோரின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து ஸ்கோரை உயர்த்த தொடங்கினர். இதில் சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதமடித்து அசத்தினர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 257 ரன்களை எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் ஸ்மித் 77 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இப்போட்டியில் அவர் 39 ரன்கள் அடித்திருந்த நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 7,111 ரன்களை எட்டினார். இதன்மூலம், அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் அவர் கிரேக் சாப்பலை பின்னுக்குத் தள்ளி, பத்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இச்சாதனை குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் சாப்பல் கூறுகையில், 'ஸ்மித் இன்னும் நான்கு, ஐந்து வருடங்களில் இந்தப் பட்டியலின் உச்சத்தில் இருப்பார் என நான் உணர்கிறேன். இதேபோல அவரது ஆட்டம் தொடர்ந்தால், அனைத்து வீரர்களின் சாதனைகளையும் முறியடிப்பார்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:2ஆவது டெஸ்ட்: லபுசாக்னே, ஸ்மித் அதிரடியால் வலுவான நிலையில் ஆஸி!