சிட்னியில் நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 375 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இப்போட்டியில் 50 ஓவர்களை வீசுவதற்கு இந்திய அணி 4 மணிநேரத்திற்கும் அதிகமாக எடுத்துக் கொண்டது. அதாவது ஆஸ்திரேலிய நேரப்படி இந்தப் போட்டி இரவு 10.15 மணிக்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போட்டி இரவு 11.40 மணிக்குத்தான் முடிந்தது. இது ஐசிசியின் ஒழுங்கு விதிகளின்படி குற்றமாகும்.