தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

AUS vs IND: சிட்னி மைதானத்தில் 25% பார்வையாளர்களுக்கு அனுமதி!

சிட்னியில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு 25 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

AUS vs IND: SCG to be at 25 pc capacity for third Test
AUS vs IND: SCG to be at 25 pc capacity for third Test

By

Published : Jan 4, 2021, 3:25 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதிமுதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு நாட்டு வீரர்களும் நேற்று சிட்னிக்குச் சென்றடைந்தர்.

இதில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக தனிமைப்படுத்தப்பட்ட இந்திய அணி வீரர்கள் உள்பட, அணி குழுவினருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் இந்திய அணியில் யாருக்கும் தொற்று இல்லை என வந்துள்ள நிலையில், தற்போது அந்த வீரர்கள் அனைவரும் சிட்னியில் மற்ற வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டியைக் காண பார்வையாளர்கள் அனுமதிகப்படுவார்களா? என்ற சந்தேகம் நில்வியது.

ஏனெனில் முன்னதாக 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்த நிலையில், சிட்னியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் வீரர்கள் மெல்போர்னில் பயிற்சி பெற்றுவந்தனர்.

அதனால் சிட்னி டெஸ்ட் போட்டி பார்வையாளர்களின்றி நடைபெறுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிட்னி டெஸ்ட் போட்டியைக் காண 25 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்திய வீரர்கள் யாருக்கும் கரோனா தொற்று இல்லை - பிசிசிஐ அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details